உடுவரவில் மண்சரிவு; மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று சேதம்

112 0
ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் மீட்கப்பட்டு பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மண் மேடு சரிந்ததால் வீட்டிற்கும், வீட்டில் இருந்த பொருட்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குறித்த மண் மேடு சரிந்து பிரதேச மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.