தலதா மாளிகையில் விட்டுச்சென்ற பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

77 0

ஏப்ரல் 18 ஆம் திகதி தொடக்கம் இன்று (27) வரை சிறி தலதா வழிபாட்டுக்காக வருகைதந்த யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பொருட்களை பெற்று, மீண்டும் வழிபாடு நிறைவுற்றவுடன் ஒப்படைக்கும் பணியை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும், சில யாத்திரிகர்களின் பொருட்கள் மீண்டும் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும், அவர்களின் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய மாகாண பிரதம செயலாளர் செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கண்டி, வாவியோரத்திலுள்ள நடைபாதையில் ஜோய் படகு சேவை நிலையத்துக்கு அருகில், நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) மேற்படி பெற்றுச்செல்லாத பொருட்களை திருப்பி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, குறித்த இடத்திற்கு வருகைதந்து, தங்கள் அடையாள அட்டையை சமர்ப்பித்து, தங்களது பொருட்களை பெற்றுச்செல்லுமாறு பாதுகாப்பு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

071-580 3000

077-531 1797

071-096 5890