வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி கலைப் பிரிவில் முதல் இடம்

86 0

உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  (26.04.2025) வெளியாகின.

அதில் கலைப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா என்ற மாணவி, தமிழ், அரசியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 94ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.