மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்

71 0

மன்னார் (Mannar) மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ச (Nalinda Jayatissa) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது நேற்று (24.04.2025) மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விஜயத்தின் போது நலிந்த ஜெயதிஸ்ச வைத்தியசாலைக்கான கதிரியக்க இயந்திரத்தினை வழங்கி வைத்துள்ளார்.

கலந்துரையாடலில் வைத்தியசாலையின் பல விடயங்கள் பேசப்பட்டதுடன்,  குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.