மக்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

121 0

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்கப்படு்ம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

வடக்கு  ஆளுநர் செயலகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடன் நேற்று (23.04.2025) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,  சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை மறந்து சில உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் செயலாளர்கள் இழைக்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது.

எமது நிர்வாகக் கட்டமைப்பிலிருக்கின்ற இவர்களின் தவறுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

முன்னைய ஆட்சிக் காலங்களில் எமது மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முன்வந்த பலர் பல்வேறு காரணங்களால் குறிப்பாக இலஞ்சம் கோரியமையால் திரும்பிச் சென்றனர்.

அவர்கள் இப்போதும் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்குகளை நேரிய சிந்தனையுடன் அதிகாரிகள் செய்துகொடுக்க வேண்டும்,என்று குறிப்பிட்டுள்ளார்.