பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் புகழுடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (24) கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.
பாப்பரசர் தனது 88ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.
பாப்பரசரின் புகழுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அரச மரியாதையுடன் வத்திகானிலுள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் சனிக்கிழமை (26) பாப்பரசரின் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.



