கண்டி நகரில் எல்லை மீறிய சன நெறிசல் ; சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படலாமென எச்சரிக்கை

87 0

சுகாதாரப் பிரச்சினைகளை மனதிற்கொண்டு மறு அறிவித்தல் தரும் வரை கண்டி நகருக்குள் பிரவேசிக்க வேண்டாம் என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டி நகரால் தாங்கக் கூடிய மக்கள் தொகையையே நகரம் ஏற்றுக் கொள்ளும். அப்படி அல்லாத பட்சத்தில் எதிர்பாராத சுகாதார சீர் கேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தற்போது கண்டி நகரினுள் சுமார் நான்கு இலட்சம் யாத்திரீகர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் வௌியேற சுமார் மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும்.

ஏனெனில் அவர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். வரிசையை விட்டு விலகாத நிலையிலும் அவர்களுக்கான  வேறு வசதிகள் இல்லாத நிலையிலும் சுகாதார வசதிகளையும், கழிவகற்றல் வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட அளவு மக்கள் வரவை மட்டுமே நகரம் தாக்குப்பிடிக்கும் கண்டி நகர் ஒரு மட்டுப்படுத்தப்பட நகரமாகும்.

பல இலட்சம் மக்கள் ஒன்று கூடியுள்ள காரணத்தால் சுற்றாடல் பிரச்சினை, சுகாதார சீரகேடுகள், களிவகற்றல் பிரச்சினைகள், கழிவுப் பொருட்களை அகற்றுவதில் பொருப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களால் நகரம் தற்போதிலிருந்தே எல்லை மீறி உள்ளது. எனவே பக்தர்கள் கண்டிக்கு வருவதை மறு அறிவித்தல் வரை தவிர்ந்து கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவிக்கையில்,

இதற்கு மேலும் கண்டி நகருக்குள் மக்கள் பிரவேசித்தால் அவர்களுக்கு உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் எதனையும் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.