மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு

98 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் 134  தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன்,   இதுவரை எவ்வித வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்காக விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.