டேன் பிரியசாத் படுகொலை.. பிரதான சந்தேக நபர் அதிரடி கைது

88 0

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் படுகொலை சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொதுஜன பெரமுனவின் கொலன்னாவை நகரசபை வேட்பாளரான டேன் பிரியசாத் கொல்லப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்றைய தினம் முக்கிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.