மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு 2 மணிமண்டபமா?

104 0

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு பரங்கிப்பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராஜேந்திரனின் சமாதிக்கு அருகிலுள்ள இடத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்திருப்பது பரபரப்பான செய்தியாகி இருக்கிறது.

1965-ல் மத்​திய அரசின், இந்தி மட்​டுமே ஆட்​சிமொழி என்ற சட்​டத்தை எதிர்த்து தமி​ழ​கத்​தில் தன்​னெழுச்​சி​யான போராட்​டங்​களில் மாண​வர்​கள் ஈடு​பட்​டனர். சிதம்​பரம் அண்​ணா​மலை பல்​கலைக்கழகத்​தில் அப்​படி போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாண​வர்​களை அடக்க போலீஸ் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் ராஜேந்​திரன் என்ற மாண​வர் பலி​யா​னார். சிவகங்கை மாவட்​டம் கல்​லலைச் சேர்ந்த ராஜேந்​திரனின் உடல் சிதம்​பரம் அருகே பரங்​கிப்​பேட்டையில் உள்ள ரங்​கப்​பிள்ளை மண்​டபத்​தில் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

அத்​துடன் அண்​ணா​மலை பல்​கலைக்​கழக மாண​வர்​களால் பல்​கலைக்​கழக முகப்​பில் ராஜேந்​திரனுக்கு சிலை​யும் அமைக்​கப்​பட்​டது. ஆண்டுதோறும் மொழிப்​போர் தியாகி​கள் தினத்​தில் மாண​வர்​கள், திமுக, அதி​முக, பாமக, மதி​முக உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் அமைப்​பு​கள் ராஜேந்​திரன் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​து​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளனர்.

கே.​பால​கிருஷ்ணன் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ள​ராக இருந்த போது, மொழிப்​போர் தியாகி ராஜேந்​திரனுக்கு மணிமண்​டபம் அமைக்க வேண்​டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்​தார். இதை ஏற்று ‘மொழிப்​போர் தியாகி ராஜேந்​திரன் சமாதி உள்ள பரங்​கிப்​பேட்​டை​யில் அவருக்கு மணிமண்​டபம் கட்​டப்​படும்’ என்று அறி​வித்​தார் முதல்​வர் ஸ்டா​லின். இதையடுத்து பரங்​கிப்​பேட்​டை​யில் ராஜேந்​திரன் சமாதி அமைந்​துள்ள இடத்தை புவனகிரி வட்​டாட்​சி​யர் மற்​றும் அரசு அதி​காரி​கள் பார்​வை​யிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்​தனர். அந்த இடமானது ராஜேந்​திரனின் குடும்​பத்​தினர் பெயரில் உள்​ளது.

இந்த நிலை​யில், ராஜேந்​திரனின் சமாதி அமைந்​துள்ள பகு​தி​யைச் சுற்​றி​யுள்ள சுமார் 4.1 சென்ட் இடத்தை விலைக்கு வாங்​கிய நாதக ஒருங்​கிணைப்​பாளர் சீமான், அதை கடந்த 21-ம் தேதி தனது பெயரில் பத்​திரப்​ப​திவு செய்​துள்​ளார். தமிழக அரசு ராஜேந்​திரனுக்கு மணிபண்​டபம் கட்​டு​வ​தாக அறி​வித்​துள்ள நிலை​யில், அவரது நினை​விடத்​தைச் சுற்​றி​யுள்ள இடத்தை சீமான் கிரை​யம் பெற்​றுள்​ளது பல்​வேறு சர்ச்​சைகளை கிளப்பி இருக்​கிறது.

இது குறித்து நம்​மிடம் பேசிய பரங்​கிப்​பேட்டை வடக்கு ஒன்​றிய திமுக செய​லா​ளர் முத்​து பெரு​மாள், “ஆண்டுதோறும் மொழிப்​போர் தியாகி​கள் தினத்​தில் திமுக சார்​பில் தியாகி ராஜேந்​திரன் சமா​தி​யில் மலர் மாலை வைத்து அஞ்​சலி செலுத்​தப்​பட்டு வரு​கிறது. ராஜேந்​திரனுக்கு மணிமண்​டபம் கட்​டப்​படும் என்று முதல்​வர் அறி​வித்த பிறகு அவசர​மாக ஓடி வந்து ராஜேந்​திரன் சமா​தி​யில் மாலை வைத்து மரி​யாதை செய்​கி​றார் சீமான். இத்​தனை நாளும் அவர் எங்கே போயிருந்​தார்? அதே​போல், மணிமண்​டபம் கட்​டு​வதற்​கான திட்ட அறிக்கை தயா​ராகி வரும் நிலை​யில், திடீரென ராஜேந்​திரன் சமா​திக்கு அரு​கில் சீமான் இடம் வாங்​கு​கி​றார். பகட்டு அரசி​யலுக்​காகவே அவர் இப்​படிச் செய்​கி​றார். அவரது நடிப்பு அரசி​யல் எல்​லாம் தமிழக மக்​களிடம் எடு​ப​டாது” என்​றார்.

நாதக மாநில ஒருங்​கிணைப்​பாளர் வே.மணி​வாசக​னிடம் இதுகுறித்து கேட்​டதற்​கு, “மொழிப் போராட்​டத்​தில் உயிர் நீத்த 400 தியாகி​களின் தியாகத்​தைப் பயன்​படுத்தி 1967-ல் ஆட்​சிக்கு வந்த திமுக 58 ஆண்​டு​களாக ராஜேந்​திரனுக்​காக ஒரு துரும்​பைக் கூட கிள்​ளிப் போட​வில்​லை. இப்​போது, அவர் விதைக்​கப்​பட்​டுள்ள இடத்​தில் நாதக நினைவு மண்டபம் கட்​டப்​போவதைக் கேள்​விப்​பட்டு முந்​திக் கொண்டு 30 நாட்​களுக்கு முன்பு மணி​மண்​டபம் கட்​டும் அறி​விப்பை வெளி​யிடு​கி​றார் முதல்​வர் ஸ்டா​லின்.

சீமான் கேட்​டுக்​கொண்​டதற்​கிணங்க ராஜேந்​திரனின் சமாதி அருகே உள்ள நிலத்​தின் உரிமை​யாளரிடம் பேசி 4.1 சென்ட் நிலத்தை கிரை​யம் பெற்று சீமான் பெயரில் பதிவு செய்​துள்​ளோம். சீமான் உறு​தி​யளித்​த​படி மொழிப்​போர் தியாகி ராஜேந்​திரனுக்கு அந்த இடத்​தில் மிக அழகிய மணி மண்​டபத்தை கூடிய விரை​வில் கட்டி அதன் திறப்பு விழாவை ஒரு மாநாடு போல நடத்த தீர்​மானித்​திருக்​கி​றோம்” என்​றார்.

இத்​தனை நாளும் கண்​டு​கொள்​ளப்​ப​டா​மல் இருந்த மொழிப்​போர் தியாகி ராஜேந்​திரனின் நினை​விடத்​தில் தமிழக அரசும் சீமானும் மணிமண்டபங்​களை கட்​டு​வதற்கு போட்​டி​போட்​டுக் கொண்டு முஸ்​தீபு காட்​டு​வ​தால் பரபரப்​புக்கு உள்​ளாகி இருக்​கிறது பரங்​கிப்​பேட்​டை!