கொழும்பில் வேரோடு சரிந்து வீழ்ந்த பாரிய மரம் ; 7 வாகனங்களுக்கு சேதம்

108 0

கொழும்பில் இன்று புதன்கிழமை (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.

பாரிய மரம் வேரோடு சரிந்து வீழ்ந்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, கொழும்பு வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபையும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.