புதிய பாப்பரசர் பட்டியலில் இலங்கை கர்தினாலின் பெயர்..!

105 0

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு பிறகு, புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அடுத்த பாப்பரசருக்கான தெரிவு பெயர் பட்டியலில் இலங்கையின், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன.

குறித்த பதவிக்கு சாத்தியமான கர்தினால்களின் பெயர் தொகுப்பில், வாஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கர்தினால் லூயிஸ் டேகிள், பிரான்சின் கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கர்தினால் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது