யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் தனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.
எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நான்கு சகோதரர்களான நாங்கள் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றோம்.
இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார், குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.
அதனால் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.