திருகோணமலை நகர் பகுதியில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் அமைப்பது பொருத்தமற்றது

92 0
கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்ட திட்டங்களை நகர அபிவிருத்தி என்ற போர்வையில் அதே இடத்தில் திருகோணமலை நகர் பகுதியில் முன்னெடுப்பது பொருத்தமற்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் 21 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் பல விடயங்களை மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்வாறான திட்டமிடப்படாத அபிவிருத்திகள் திருக்கோணேச்சரம் கோவில் பகுதி உட்பட கரையோர பகுதிகளுக்கும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.

குறித்த இந்த பத்தாண்டு திட்டமானது இதில் மூன்று விடயங்கள் பாதகமானது கோத்தபாய காலத்தில் குறித்த பகுதியில் திட்டம் ஒன்றை முன்வைத்தார் அது நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிராகரிக்கப்பட்டது ஏன் எனில் அந்த பகுதி தொல்பொருள் பகுதி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பகுதி என்பதால் வீடமைப்பு திட்டம் சாத்தியமாகாது என்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது அவர் மேலும் தெரிவித்தார்.