அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தினஇவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் .

