ஈக்குவடோரின் கிராமமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவசீருடையில் சேவல்பந்தயம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற குற்றவாளி கும்பல்களை சேர்ந்தவர்களே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேவல்பந்தயம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்குள் ஆயுதமேந்திய ஐவர் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.
ஈக்குவடோரின் தென்மேற்கில் உள்ள லாவலென்சியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும்வேளை அங்கிருந்த பார்வையாளர்கள் நிலத்தில் விழுந்து உயிர்தப்ப முயல்வதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.
குற்றவாளி கும்பல் ஒன்றின் ஆயுததாக்குதல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஈக்குவடோரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இராணுவசீருடையை அணிவது வழமையான விடயம்.
ஈக்குவடோர் துறைமுகங்கள் ஊடாக கொக்கெய்ன் செல்லும் வழிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு குற்றவாளிக் கும்பல்கள் முயல்வதால் இந்த ஆண்டு ஈக்குவடோரில் சராசரியாக மணித்தியாலத்திற்கு ஒருவர் இந்த கொல்லப்படும் பயங்கரமான நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈக்குவடோரில் பல்வேறு பெயர்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட குற்றவாளிக்கும்பல்கள் செயற்படுகின்றன. இந்த கும்பல்கள் போதைப்பொருள் கடத்தல் ஆள்கடத்தல் கடத்தி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன.