இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையின் உயிர்த்த ஞாயிறு பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை (20) அனுசரிக்கப்பட்டது.
சர்வலோகத்தையும் படைத்து ஆளுகை செய்யும் தெய்வமாகிய இயேசு கிறிஸ்து மனிதனின் பாவத்திற்கான தண்டனையை தாமே சிலுவையில் சுமந்து, மரித்து மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார்.
இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து, ஆயிரக்கணக்கான ஜனங்கள் பாதயாத்திரையாக நடந்தார்கள்.
பாதயாத்திரையானது கொழும்பு கொட்டாஞ்சேனை (நவீன் செரமிக் எதிரில்) காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து, ஹெட்டியாவத்தை டொக்லன், அழூத்மாவத்தை ஊடாக இயேசு ஜீவிக்கிறார் ஆலயத்தை வந்தடைந்தது.
பின்னர் ராஜாதி ராஜாவாகிய இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தி ஆராதனை செய்யப்பட்டது.
சுவி. கலாநிதி. M.R. இராஜேந்திரம் மற்றும் சுவி. டாக்டர். C.V. இராஜேந்திரம் அவர்களால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையை குறித்து தேவ செய்தி வழங்கினார்கள்.








