மட்டக்களப்பில் சியோன் தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

84 0

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று (20) காலையில் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில், சியோன் தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இதற்கமைய, தேவாலயங்களில் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடந்த 2019 – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் சியோன் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது