ஈஸ்டர் பண்டிகை நாளில் உக்ரைன்மீது தாக்குதல் நடத்தப்படாது: அதிபர் புதின்

92 0

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை.இந்நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், இன்று (ஏப். 19) மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.

ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்தக் காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது .