திருகோணமலையின்(Trincomalee) கடற்பரப்பில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையே, பயிற்சி ஒன்றை நடத்தும் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர், புதுடில்லி கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்ட அதிருப்தியை அடுத்தே, குறித்த பயிற்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளின் கடற்படைகளும் அவற்றின் வழக்கமான தொடர்புகளுக்கு ஏற்ப, திருகோணமலையில் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன.
எனினும், இந்தப் பயிற்சி குறித்த தனது அச்சங்களை இந்தியா இலங்கைத் தரப்புக்கு தெரிவித்த பின்னர், இந்தத் திட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

