மட்டக்களப்பில் பெரும் சோகம் – திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

100 0

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சந்திவெளியைச் சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.