உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

109 0
கனிமவளங்கள் குறித்து அமெரிக்காவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் கனிம வளங்களை பகிர்ந்துகொள்வது குறித்த வரைவு ஒப்பந்தத்தில்  உடன்படிக்கையில் உக்ரைன் கைச்சாத்திட்டுள்ளது என யூலியா ஸ்வைரிடென்கோh தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி உடன்படிக்கையில் உக்ரைனின் மீள்கட்டுமானத்திற்கான முதலீட்டு நிதியமும் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் முழுமையான உடன்படிக்கை சாத்தியமாகலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இத்தாலிய தலைவருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்;ப் இந்த உடன்படிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று( வியாழக்கிழமை) நாங்கள் கனிமவள உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போகின்றோம் என நினைக்கின்றேன்இஎன அவர் தெரிவித்துள்ளார்

இந்த உடன்படிக்கை குறித்து ரொய்ட்டர் மேலதிக விபரங்களை கோரியவேளை வெள்ளை மாளிகைஅவற்றை வழங்க மறுத்துள்ளது.

இந்த உடன்படிக்கை உக்ரைனின் மிக முக்கியமான கனிமங்கள் எண்ணெய் எரிவாயு போன்றவற்றை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும்.

ரஸ்யாவுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை சாத்தியமானால் அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை கோருவதற்கு உக்ரைன் ஜனாதிபதி கனிம வள உடன்படிக்கையை பயன்படுத்த முயல்கின்றார்.

எனினும் வெள்ளை மாளிகையில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் மோதிக்கொண்டதை தொடர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பது மிகவும் சவாலானதாக மாறியது.