மனம்பிட்டியவில் உள்ள ஒரு பிரார்த்தனை மையத்திற்கு அருகில் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது மனம்பிடிய காலனி சாலையில் உள்ள இலங்கை நற்செய்தி பிரார்த்தனை மையத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் போது நடந்துள்ளது.
பிரார்த்தனை கூட்டத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சம்பவம் தொடர்பாக மனம்பிட்டிய மற்றும் வெலிகந்த பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

