புத்தளம், ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொட்டுகச்சி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 15ஆம் திகதி, அதே பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களால் இருவரால் இளைஞன் தாக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட கொலையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆனமடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.