காசா: மக்கள் வசிக்கும் கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.. உயிருடன் எரிந்து 23 பேர் பலி

84 0

இஸ்ரயேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.

தெற்கு நகரமான கான் யூனுஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் கூடாரத்துக்குள் உயிருடன் எரிந்து பலியானதாக உடல்களைப் பெற்ற மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காசாவில் இதுவரை இஸ்ரேலிய தாக்குதலால் 51,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 50 நாட்களாக காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.