பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்தக் குழு 16ஆம் திகதி புதன்கிழமை இரவு உணவை முன்பதிவு செய்துவிட்டு, சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் உணவு தீர்ந்துவிட்டதாக ஹோட்டல் ஊழியர் தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள், “உணவு இல்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்க ஏன் 30 நிமிடங்கள் ஆனது?” என்று கேட்டார்கள்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே ஹோட்டல் ஊழியர்கள் அவர்களைத் தாக்கியதாகத் தெரிவித்து சி.சி.ரி.வி. காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
ஹோட்டலில் சுமார் 30 பேர் தங்களைத் தாக்கியதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் 28 வயது இளைஞனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

