தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 18 வேட்பாளர்கள் கைது

82 0

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக  18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே காலப்பகுதியில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 14 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான 38  குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 138 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.