சிறைச்சாலையில் புதன்கிழமை (16) கைதிகள் இருவர் சிறைச்சாலை சமையற்கூடத்தில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை, ஒரு கைதி மற்றைய கைதியின் மீது சுடுநீரை வீசியுள்ளார்.
சுடுநீர் வீச்சுக்கு இலக்கான கைதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சுடுநீரை வீசிய கைதி தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

