குறித்த கைது நடவடிக்கையானது நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடையக்குறிச்சி பகுதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இடையக்குறிச்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவராவார்.
அத்தோடு, கொபேகனே பொலிஸ் பிரிவின் அரலுகஸ்வெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயயதுடையவராவார்.
இதேவேளை, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கம பகுதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையின் போது, 01 வெளிநாட்டுத் துப்பாக்கி, 06 தோட்டாக்கள், ஒரு பை வெடிமருந்து , 10 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்,05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 11,100 ரூபா பணத்தொகை என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ரத்கம பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



