ராகமவில் கோடாவுடன் மூவர் கைது !

71 0

ராகம பொலிஸ் பிரிவின் பொடிவி கும்புர சதுப்பு நிலப் பகுதியில் சட்டவிரோத மதுபானம், மதுபான தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா மற்றும்  செப்புப் பாத்திரங்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ராகம மற்றும் வெலிசறை பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 32 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 375 லீற்றர் (10 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம், 8,100 லீற்றர் (40 பீப்பாய்கள்) மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா மற்றும் 05 செப்புப் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.