தொழிலுக்கு புறப்படுவதற்கான சுப நாள் இன்று!

58 0

இலங்கையின் பண்பாட்டு பண்டிகையாகக் கருதப்படும் சிங்கள தமிழ் புத்தாண்டு, பாரம்பரிய சடங்குகள் மற்றும் சுப நேரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்படுகிறது.

அதற்கமைய, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அமைவாக தொழில் மற்றும் பயணங்களுக்கு புறப்படுதலுக்கான நாள் இன்றாகும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்தல் சடங்கு நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், இன்று (17) வியாழக்கிழமை காலை 9:03 மணிக்கு தொழில் மற்றும் பயணங்களுக்கு புறப்படுதலுக்கான சுப நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தாண்டுக் காலத்தில் தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்குத் திருப்பி வருவதற்காக இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகள் தேவை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்தார்.

இதேவேளை, நாளை (18) முதல் 21 ஆம் திகதி வரை விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழக்கமான ரயில்களுக்கு மேலதிகமாக, இந்த நாட்களில் விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.