சுமார் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்கர் கைது

111 0

சுமார் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்க பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டபோது 23 கிலோகிராம் குஷ் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தாய்லாந்தில் இருந்து குஷ் போதைப்பொருள் கையிருப்பை இந்நாட்டிற்கு கொண்டு வந்ததாக தெரிவந்துள்ளது.

இந்த 31 வயதான அமெரிக்க நாட்டவர், நாட்டில் நில வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.

அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 23 கிலோகிராம் இந்த “குஷ்” போதைப்பொருளை ஒவ்வொன்றும் 1 கிலோகிராம் கொண்ட 23 பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.