ஶ்ரீ தலதா மாளிகை கண்காட்சி காலப்பகுதியில் கழிவகற்ற 450 கழிவுத் தொட்டிகள்

107 0
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில், பொதுமக்கள் கழிவகற்றுவதற்கு 450 கழிவுத் தொட்டிகளை தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்கியுள்ளது.

ரிச்சர்ட் பீரிஸ் கூட்டு நிறுவனத்தின் ‘ஆர்பிக்கோ’ அமைப்பு வழங்கிய மேற்படி தொட்டிகளை கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா அபேசிங்க பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் ‘ஆர்பிகோ’ நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் லலித் விஜேசிங்க, கண்டி மாநகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் தலைவர் நாமல் திசாநாயக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.