தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவர்.
சந்தேக நபர் தம்புள்ளை பிரதேசத்தில் மாடு ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

