தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
தீ பரவலின்போது, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள அகமதாபாத் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.