அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முழுமையான அனுமதியை வழங்கவேண்டும்

109 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு செய்திசேகரிப்பதற்கு அசோசியேட்டட் பிரஸிற்கு வெள்ளை மாளிகை முழுமையான அனுமதியை வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிபதியொருவர் உத்தரவிட்டுள்ளார்.

ஏபி தனது செய்திகளில் மெக்சிக்கோ வளைகுடா என தொடர்ந்தும் குறிப்பிட்டு வந்ததால் அது தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நீதிபதியொருவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமித்த மாவட்ட நீதிபதி டிரெவர்மக்படன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக வெள்ளை மாளிகை நிகழ்வுகளில் ஏபி செய்தியாளர்களை அனுமதித்தேயாகவேண்டிய நிலை  டிரம்ப்; நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசமைப்பின்கீழ் வெள்ளை மாளிகையின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு சில ஊடகவியலாளர்களிற்கு அனுமதி வழங்கிவிட்டு – அவர்களின் கருத்திற்காக வேறு ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மெக்சிக்கோ வளைகுடா என்பதை அமெரிக்க வளைகுடா என அமெரிக்க ஜனாதிபதி பெயர் மாற்றம் செய்த பின்னரும் அதனை ஏபி பயன்படுத்தாததை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு அந்த செய்தி நிறுவனத்திற்கு பெருமளவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது என நீதிபதிதெரிவித்துள்ளார்.