கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக்க விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமாக மாணிக்க கங்கைக்கு அருகில் இடம்பெற்ற கட்டுமானப் பணிக்கு ஆவணங்களை தயாரித்தல் தொடர்பில் அசோக்க விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

