பன்வில பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

78 0

பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரகஸ்தென்ன பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புடுஹபுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர்  பன்வில, கரகஸ்தென்ன பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் ஒரு வீட்டில் உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், கம்பியொன்றை  தூக்கியபோது  அருகிலுள்ள உயர் மின்னழுத்த மின் கம்பியில்  பட்டு அதிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி காயமடைந்த மற்றைய நபர்  தெல்தெனிய வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில்  பன்வில  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.