முல்லைத்தீவு கடற்பகுதியை பாதுகாத்திடுங்கள்

107 0

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க அதிகாரிகள் முன்னின்று செயற்படுமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினுடைய உப தலைவர் வி அருள்நாதன் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், இதுவரை காலமும் தற்போதைய கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவுக்கு வருகைத்தந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்