தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் சனிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தம்புள்ளை, மெனிக்தென பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து, 20 லீற்றர் சட்டவிரோத மதுபானம், செப்பு சுருள், பிளாஸ்டிக் பீப்பாய் மற்றும் இரும்பு பீப்பாய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

