நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதம் 31 ஆம் திகதி பெண்ணொருவர் தனது தாயாருடன் பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, தன்னை பரிசோதித்த வைத்தியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன்படி, கடந்த 2 ஆம் திகதி இந்த பெண்ணை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்தார். எனினும், வைத்திய அறிக்கையில் திருப்தியடையாமையினால், விசேட மருத்துவ குழுவால் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

