கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வஹகோட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து, 7 கஞ்சா செடிகள், 181 லீற்றர் கோடா மற்றும் உள்நாட்டுத் துப்பாக்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

