இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் காலை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


