உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில்37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்றுமுன்னர்உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

