உலகின் அனைத்து நாடுகளினதும் இறக்குமதிகளிற்கு 10 வீத வரி – இலங்கை 44 வீதம்- டிரம்ப் அறிவிப்பு

47 0
image
உலகின் அனைத்து நாடுகளிற்குமான புதியஇறக்குமதி வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அனைத்து உலகநாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதிகளிற்கு 10 வீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவுடன் வர்த்தக நிலுவையை கொண்டுள்ள நாடுகளிற்கு அவர் அதிகளவு வரிகளை விதித்துள்ளார்.கம்போடியாவிற்கு 49 வீதம் வியட்நாமிற்கு 46 வீதம்,இலங்கைக்கு 44 வீதம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதிகளில் 25 வீதமானவை அமெரிக்காவிற்கே ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.