கம்பஹா, பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ மற்றும் நுகபே ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 375 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 375 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.