மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் தலைமன்னார் ஊர்மனை பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 85 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கேரள கஞ்சா இந்தியாவிலிருந்து கடல் வழியாக அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிந்தமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

