.மூன்று தசாப்தங்களிற்கு மேலாக பத்திரிகையாளராக பணிபுரியும் நாமினிவிஜயதாச தனது செய்தி அறிக்கையிடவில் துணிச்சலையும் நேர்மையையும் வெளிப்படுத்திவந்துள்ளார்.இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மனித பாதிப்புகளை பதிவு செய்வதன் மூலம் தனது பத்திரிகையாளர் பணியை ஆரம்பித்த அவர்யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான குரலாக விளங்கினார்.
அவரது புலனாய்வு பணி அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது,தனிப்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் அந்த பணியை முன்னெடுத்தார்

