தெல்தெனியவில் 2,201 லீற்றர் கோடா கைப்பற்றல்!

71 0
கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 2,201 லீற்றர் கோடா அடங்கிய 7 பீப்பாய்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (28) கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கோடா மேலதிக விசாரணைகளுக்காக தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.