சிலாபத்தில் கார் – துவிச்சக்கரவண்டி மோதி விபத்து !

67 0
புத்தளம் – சிலாபம்  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி பின்னர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது காரின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.